Breaking : 7 மணி நேரம் நடந்த விசாரணை..! சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கேட்ட கேள்விகள் என்னென்ன? நாளையும் ஆஜராக உத்தரவு..!

vijay cbi 2

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.


காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்குள் சென்ற விஜய் விசாரணை முடிந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டார்.. விசாரணை சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடந்தாலும், விஜய் கூறிய எழுத்துப்பூர்வ பதிலில் கையெழுத்து பெறுவதற்காக 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தார்.. சுமார் 7 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் இருந்த விஜய் பின்னர் ஆதவ் அர்ஜுனா உடன் காரில் புறப்பட்டு சென்றார்.

இன்றைய விசாரணையில் விஜய்யிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது..

விஜய்யிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னென்ன?

கரூரில் மக்கள் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகிய இடம் என்று உங்களுக்கு தெரியுமா?

மக்கள் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?

கரூர் பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் வருவதற்கு தாமதம் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? உண்மை எனில் தாமதமாக வர என்ன காரணம்?

நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுவது உண்மை தானா?

மக்கள் கூட்டத்தில் அமைதியின்மையான சூழல் நிலவியது உண்மை தானா?

மக்கள் கூட்டத்தின் போது காவல்துறை தடியடி நடத்தியது பற்றி தெரியுமா?

சம்பவம் நடந்த உடனேயே நீங்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது ஏன்?

கால தாமதம் ஆனதற்கான காரணத்தை காவல்துறையிடம் கூறினீர்களா?

இந்த கேள்விக்கான பதில் முறைப்படி தட்டச்சு செய்யப்பட்டு, நகல் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபரிடம் உறுதி செய்ய கையெழுத்து பெறப்படும்.. இன்றைய தினம் விசாரணை முடிவடைந்த நிலையில் நாளைய தினமும் விஜய்யிடம் விசாரணை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே 2-வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார்..

RUPA

Next Post

சமையலறையில் இந்த பாத்திரத்தை காலியாக வைப்பது வறுமையின் அறிகுறியாகும்.! இந்த தவறை செய்யாதீங்க..!

Mon Jan 12 , 2026
வாஸ்து சாஸ்திரம் வீட்டில் உள்ள பொருட்களை அமைக்கும் முறைகளையும், அவற்றின் விளைவுகளையும் விவரிக்கிறது. இதில் சமையலறை வாஸ்து மிகவும் முக்கியமானது. ஏனெனில் சமையலறை என்பது வீட்டின் ஆற்றல் மையம், அது முழு குடும்பத்திற்கும் ஆற்றலை வழங்கும் ஒரு இடம். சமையலறை வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டால், அது வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தைக் கொண்டு வரும். இதில் ஏற்படும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சில […]
vastu kitchen

You May Like