முடிவுக்கு வரும் இழுபறி..! இத்தனை சீட் தான்..! ஸ்டாலின் கறார்..! இன்று முடிவை அறிவிக்கிறது காங்கிரஸ்..!

stalin p chidambaram

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது.


முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.. ஆனால் 40 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.. ஆனால் திமுக தலைமையோ 25 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே தர முடியும் என்று கூறிவிட்டது..

காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.. இந்த சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினர்..

இந்த சூழலில் தான் கூட்டணியை தக்கவைக்க, கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார்.. அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் உடனிருந்தார்..

முதல்வர் ஸ்டாலின் – ப. சிதம்பரம் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.. அப்போது,, 40 தொகுதிகளில் இருந்து சற்று இறங்கி 36 தொகுடிகளை தர வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கேட்டதாக கூறப்படுகிறது.. திமுக தரப்போ 29 தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது.. அதிலும் ஒரு மாநிலங்களவை தொகுதி 2028-ல் நடக்கு தேர்தலில் கொடுப்பதாக திமுக தலைமை கூறியதாக தெரிகிறது..

முதல்வர் ஸ்டாலின் – ப. சிதம்பரம் இடையிலான இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது.. திமுக கூட்டணியில் தொடரவே காங்கிரஸ் டெல்லி தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிக தொகுதிகள் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது..

இன்றைக்குள் முடிவை சொல்ல வேண்டும் என்று திமுக காங்கிரஸ் தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளதாம்.. எனவே இன்று காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : இந்த வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ.41,478 வட்டி கிடைக்கும்!

RUPA

Next Post

கரைந்து போகும் ஓபிஎஸ் அணி..? மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!! எடப்பாடி பழனிசாமி குஷி..!!

Wed Mar 4 , 2026
விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். […]
Edappadi Palanisamy 2026

You May Like