BREAKING| பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டி.. தவெக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்!

vijay 1

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கள் கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்பது நேற்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிருகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேர்பாளர்களையும் இன்று ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சி மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொள்கை தலைவர்களுக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் விஜய் உரையாற்றினார். அவர் பேசுகையில், “திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் திமுகவில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பவர்கள் எம்.எல்.ஏக்கள் அல்ல.. மக்களை காப்பவர்கள் தான் உண்மையான எம்.எல்.ஏ. அப்படிபட்டவரைகளை நானே தேர்வு செய்து தவெக வேட்பாளர்களாக களம் இறக்குகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமுனை போட்டி தான். என்றார்.

தொடர்ந்து தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிருகிறார். வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு..

என் ஆனந்த் – சென்னை தி.நகர் தொகுதி

வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா

கோபிசெட்டிப்பாளையம் – செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் – சி.டி.ர். நிர்மல்குமார்

குமாரபாளையம் – விஜயலட்சுமி

திருத்தனி – சத்யகுமார் 

திருச்செங்கோடு – அருண்ராஜ்

ஆயிரம் விளக்கு – ஜேசிடி பிரபாகர்

கொளத்தூர் – விஎஸ் பாபு

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்,

செய்யூர் (தனி) – மோகன் ராஜா

சேப்பாக்கம் – செல்வம்

மதுராந்தகம் (தனி) – எழில் கேத்ரின்

லால்குடி – கு.பகிருஷ்ணன்

பூந்தமல்லி (தனி) – ஆர்.பிரகாசம்

திருப்பூர் வடக்கு – சத்யபாமா

மதுரவாயல் – ரேரவந்த் சரண்

அம்பத்தூர் – பாலமுருகன்

மாதவரம் – எம்.எல்.விஜய் பிரபு

வால்பாறை – ஸ்ரீதரன்

ஓமலூர் – அதியமான்

காங்கேயம் – மணி

கோவை வடக்கு – வி சம்பத்குமார்

கோவை தெற்கு – வி செந்தில்குமார்

பர்கூர் – முரளிதரன்

விருதாச்சலம் – எஸ்.விஜய்

பண்ருட்டி – என்.மணிகண்டன்

கடலூர் – வி ராஜ்குமார்

குறிஞ்சிப்பாடி – ராஜ்குமார்

புவனகிரி – மகாலிங்கம்

முதுகுளத்தூர் – மலர்விழி

சிதம்பரம் – என்.பாரி

காட்டு மன்னார் கோவில் ( தனி) – என் சீனிவாசன்

பூம்பூகார் – ஜெ.விஜயாலயன்

நாகை – என்.சுகுமார்

வேதாரண்யம் – கிங்ஸ்லி ஜெரல்டு

மன்னார்குடி – யுவிம் ராஜராஜன்

திருவாரூர் – வி.வீரமணி

போடி – பிரகாஷ்

கம்பம் – ஜெகன்நாத் மிஸ்ரா

ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி

கும்பகோணம் – ஆர். வினோத்

சிவகாசி – கீர்த்தனா

சாத்தூர் – அஜித்

ஸ்ரீவல்லிப்புத்தூர் – கார்த்திக்

திருவையாறு – மணிகண்டன்

விருதுநகர் – செல்வம்

தஞ்சை – விஜய் சரவணன்

ஒரத்த நாடு – கே அரவிந்த

காரைக்குடி – பிரபு

பட்டுக்கோட்டை – மதன்

பேராவூரணி – டி சந்திர காண்டீபன்

விளாத்திகுளம் – காசிராம்

தூத்துக்குடி – ஸ்ரீநாத்

ஸ்ரீவைகுண்டம் – சரவணன்

ஒட்டப்பிடாரம் – மதன்ராஜா

விராலிமலை – முருகேசன்

அறந்தாங்கி – முகம்மது பர்வேஷ்

Read more: காலையில் தோன்றும் குமட்டல், வாயுத் தொல்லை.. அசால்ட்டா இருக்காதீங்க.. உயிருக்கே ஆபத்து!

English Summary

TVK leader Vijay introduced all 234 candidates on one platform

Next Post

உங்க குழந்தைகள் 'Crocs' செருப்பு யூஸ் பண்ணுறாங்களா..? உடலில் இந்த பிரச்சனை வருவது கன்பார்ம்! பெற்றோர்களே உஷார்!

Sun Mar 29 , 2026
Do Your Kids Wear Crocs? This Health Problem Is Almost Guaranteed!
crocs

You May Like