தமிழகம் முழுவதும் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! பரபரக்கும் தேர்தல் களம்!

election44410 1643283557

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கான மிக முக்கியமான கட்டமான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிறது.


அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வேட்பாளர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனுத்தாக்கல் செய்ய வரும்போது, அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

ஊர்வலமாக வரும்போது, தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Read more: ஜிம் போக நேரமில்லையா..? வீட்டிலேயே உடல் எடையை குறைக்க 4 சிம்பிள் டிப்ஸ்..!

English Summary

Filing of nominations begins across Tamil Nadu today! A vibrant election field!

Next Post

IPL 2026| முதல் போட்டியிலே மாஸ் காட்டிய மும்பை இந்தியன்ஸ்! CSK - RR இன்று மோதல்..

Mon Mar 30 , 2026
The 13-year wait is over.. Mumbai Indians showed mass in the very first match..!
Mumbai Indians

You May Like