ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-க்கு பிறகு முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், 13 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த அஜிங்க்ய ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், ஃபின் ஆலன் 17 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். பின்னர் அறிமுக வீரர் அஜிங்க்ய ரஹானே 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தியார். 20 ஓவர்கள் முடிவில் KKR அணி 220/4 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
221 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரையான் ரிகெல்டன் இணைந்து 148 ரன்கள் எடுத்து போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரோகித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் (6 சிக்ஸர், 6 பவுண்டரி) எடுத்தார். ரிக்கெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் கூட்டணி மும்பை அணியின் வெற்றியை எளிதாக்கியது.
இறுதியில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். 19.1 ஓவர்களில் 224/4 என்ற கணக்கில் இலக்கை எட்டிய மும்பை அணி, இந்த சீசனில் வலுவான அறிமுகத்தை பதிவு செய்துள்ளது.
நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், இன்று சென்னை அணி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்குமா என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அசாம் மாநிலம் கௌஹாட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சென்னை அணி எதிர்கொள்கிறது.
Read more: தமிழகம் முழுவதும் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! பரபரக்கும் தேர்தல் களம்!



