வில்லிவாக்கம் டூ தி.நகர்.. போலீஸ் போட்ட கண்டிஷனால் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்..!

vijay tvk

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..


இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கிலும் தன்னை வேட்பாளராக அறிவித்த விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பெரம்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூரில் திமுக அரசை குற்றம்சாட்டிய விஜய் தவெகவுக்கு இந்த தேர்தலில் ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.. இதை தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொளத்தூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாக்கு சேகரித்தார்..

மேலும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னை வில்லிவாக்கம் ,அண்ணா நகர் ,டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கடிதம் அனுப்பப்பட்டது. காவல்துறை தரப்பில் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் பல கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கு ஒரு மணி நேரம் அனுமதி வழங்கினர். மேலும் திநகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி வழங்க முடியாத நிலை இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விதித்திருந்த நேர கட்டுப்பாடுகளை செயல்படுத்த முடியாது என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: இன்றே கடைசி.. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலையுடன் நிறைவு..!

English Summary

Villivakkam to T.Nagar.. Vijay cancels campaign due to conditions imposed by police..!

Next Post

நீரிழிவு நோயாளிகள் காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா..? அப்ப இதுதான் நடக்கும்..! அலட்சியம் வேண்டாம்..

Mon Apr 6 , 2026
Do diabetics skip breakfast? This is what happens!
skipping breakfast 1

You May Like