தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது.. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வரப்போகின்றனர்.. ஆரம்பத்தில் இருந்தே இதுகுறித்து நாம் எச்சரித்து வந்தோம்.. மக்களை தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை நாங்கள் கேட்டோம்.. சொன்னதை கேட்டதற்காகவே எங்களுக்கு தண்டனை தருகிறீர்களா…?
வட மாநிலங்களுக்கு வாரி வழங்குவதைப் போல தொகுதிகளை அதிகப்படுத்த பாஜக முயற்சி செய்கிறது.. தமிழ்நாட்டின் வாசல்வரை பேராபத்து வந்துவிட்டது.. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிடம் ஆலோசனை கேட்காமல் மத்திய இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறது.. பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்டு நேரம் கேட்டும், நேரம் ஒதுக்கவில்லை..
பாஜக அரசு அவசரகதியில் தொகுதி மறூவரையை செய்ய துடிப்பது ஜனநாயக படுகொலை.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் அவசரகதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவது ஏன்.?
நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள்.. தமிழ்நாட்டிற்கு பாதிக்கப்படும் மாதி அல்லது வட மாநிலங்களுக்கு வாரி வழங்குவதை போல் தொகுதிகளையும் அதிகப்படுத்த முயற்சி செய்தாலோ நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.. வீதியில் இறங்கி போராடுவோம்.. தொகுதி மறுவரை தொடர்பாக மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்..
இதுவரை பார்த்திராக தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும். தொகுதி மறுவரை செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். தேர்தல், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான், கொள்கையும், சுயமரியாதையும் தான் முக்கியம்.. பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. இது மிரட்டல் இல்லை. தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை.. தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..” என்று தெரிவித்தார்.



