BREAKING| குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2500.. விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி..! – தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..

vijay 4

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, 800 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கியுள்ளதால், க்யூ-ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.


“மக்களின் தேர்தல் அறிக்கை” என்ற பெயரிளே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அக்கட்சியின் தலைவர் விஜய் விவசாயிக்கு வழங்கினார். அதை தொடர்ந்து ஆசிரியை, மூன்றாம் பாலினத்தவர், மீனவர், ஓட்டுனர்களுக்கும் முழுமையான தேர்தல் அறிக்கையின் பிரதியை வழங்கினார். மேலும் மும்மதத்தை சேர்ந்தவர்களையும் வரவழைத்து தேர்தல் அறிக்கையின் பிரதியை வழங்கினார். தவெக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பின்வருமாறு:

* ஒவ்வொரு குடும்பத்திற்கு வருடம் 6 கேஸ் சிலிண்டர்

* 60 வயதுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்

* மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை

* தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப்பள்ளிகள்

* ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக்கடன் உத்தரவாதம்

* போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு

* குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம். மலிவு விலை மருந்துகளும் வழங்கப்படும்.

* வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம். டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.2500.

Subscribe to my YouTube Channel

Read more: மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்..! – பிரதமர் மோடி

English Summary

The TVK election manifesto has been released by party leader Vijay.

Next Post

BREAKING| 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்.. ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நியமனம்..! - தவெக தேர்தல் அறிக்கை..

Thu Apr 16 , 2026
BREAKING| Free electricity up to 200 units.. Contract teachers appointed..! - TVK Election Manifesto..
24 67208f1b7fd84

You May Like