ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், மனைவியை கோடரியால் வெட்டி அவரது காலைத் துண்டித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், முப்பல்லா மண்டலத்திலுள்ள தொண்டாபி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி பூலட்சுமி(33). இந்த தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியது.
ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவியின் காலில் ஓங்கி வெட்டியுள்ளான். இதில் அவரது கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரைக் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணவனைக் கைது செய்தனர். கொலை முயற்சி மற்றும் கொடூரத் தாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் லட்சுமய்யா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணையில், தகாத உறவு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஒரே ஒரு ஹாட் டாக் உங்கள் ஆயுளிலிருந்து 36 நிமிடங்களைக் குறைக்கும்.. எச்சரிக்கும் புதிய ஆய்வு..!



