8,000 ஸ்டெப்ஸ்.. 24 மணி நேரம் விரதம்.. 90 நாட்களில் தொப்பையை குறைக்க நிபுணர் சொல்லும் சீக்ரெட் டிப்ஸ்..!

belly

உடல் எடையைக் குறைப்பதும், குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைப்பதும் பலருக்கும் முக்கியமான உடல்நல இலக்காக உள்ளது. இந்த நிலையில், கொழுப்பு இழப்பு நிபுணர் கெவ் ஹெய்ன்ட்ஸ் (Kev Heintz) தனது ‘X’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவல் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.


அவர் பகிர்ந்துள்ள கருத்தில், “90 நாட்களில் உங்கள் தொப்பைக் கொழுப்பை குறைக்கும் எண் சார்ந்த வாழ்க்கை முறை திட்டம்” எனக் கூறி, தினசரி பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்தினால் உடல் கொழுப்பை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் வழங்கிய முக்கிய பரிந்துரைகளில், மதுபானத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும், தினமும் குறைந்தது 8,000 அடிகள் நடக்க வேண்டும், தினசரி 7 மணி நேரம் தூக்கம் பெற வேண்டும், மேலும் 4 முதல் 6 மணி நேர உணவு இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதும் அடங்கும். இதேபோல், உடல் எடைக் குறைப்பு இலக்கிற்காக தினமும் 150 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் கொழுப்பைக் குறைக்க தினசரி 500 முதல் 1000 கலோரி அளவுக்கு குறைவாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாரத்தில் ஒரு முறை 24 மணி நேர விரதம் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வாரத்தில் நான்கு முறை தீவிர வலிமைப் பயிற்சி செய்ய வேண்டும் என்றும், வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் 30 நிமிடங்கள் நேரடி சூரிய ஒளி பெறுவது உடல்நலத்திற்கு உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, தினமும் 5 கிராம் கிரியேட்டின் மற்றும் 400 மி.கி மெக்னீசியம் கிளைசினேட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உடல் எடை குறைப்பு முயற்சியில் மன உறுதி முக்கியமானது என்றும், இலக்கை ஆதரிக்காத சூழலை தவிர்ப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். முயற்சியில் தொடர்ச்சியாக இருப்பதே வெற்றிக்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, உடலில் ஒரு அளவு கொழுப்பு இயல்பாகவும் அவசியமாகவும் உள்ளது. ஆனால் அதிகப்படியான தொப்பை கொழுப்பு உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல உடல்நல அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

Read more: Accident: நேருக்கு நேர் லாரி மோதி கோர விபத்து.. 2 ஓட்டுநர்கள் உயிருடன் எரிந்து பலி..!

English Summary

8,000 Steps, 24-Hour Fast & More: Viral Post Reveals ‘Numbers Formula’ to Lose Belly Fat in 90 Days

Next Post

"காசுக்காக ரோட்டில் கையேந்தி நின்ற திருநங்கைகள் இப்போது.." முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு..!

Mon Apr 27 , 2026
"Transgender women who were begging on the road for money.." Former Minister Ponmudi's speech..!
1358436

You May Like