“எதிரிகளுக்கு மாரடைப்பு வந்துவிடும்!” புதிய ஆயுதத்தை கையில் எடுத்த ஈரான்.. அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல்..!

us iran

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பின்தங்கிய நிலையில், எதிரிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்து அளவுக்கு தாக்கம் கொண்ட ஒரு ஆயுதத்தை விரைவில் வெளியிடப்போவதாக தெஹ்ரான் எச்சரித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி, மேற்கத்திய நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய இரகசிய ஆயுத அமைப்பை தெஹ்ரான் மிக விரைவில் களமிறக்க உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆயுதத்தின் தொழில்நுட்ப விவரங்களை வெளியிடாத போதிலும், அது போர்க்களத்தில் சமநிலையை மாற்றக்கூடிய “கேம் ஜேஞ்சர்” ஆக இருக்கும் எனவும் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் குறித்து பேசுகையில், ஈரான் பல வெற்றிகரமான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இரானி தெரிவித்தார். குறிப்பாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் அப்பகுதியில் அமெரிக்காவின் வான்வழி நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இலக்குகள் மீது 100-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்மூஸ் தற்போது முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரானிய அதிகாரிகளின் கடுமையான அனுமதி அவசியம் எனவும் அவர் கூறினார்.

எதிரிப் படைகள் ஈரானின் கடற்பரப்பிற்கு நெருங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈரானிய எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல்களை கைப்பற்றிய அமெரிக்க நடவடிக்கையை “கடற்கொள்ளை” என விமர்சித்த அவர், கப்பல் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், அமெரிக்க தலைமையிலான கடற்படை முற்றுகையை மீறியும் சில ஈரானிய கப்பல்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். எந்தவொரு மோதலும் தீவிரமடைந்தால், வலுவான பதிலடி கொடுக்க ஈரான் ஆயுதப்படைகள் முழு தயார் நிலையில் உள்ளதாகவும், “பின்வாங்காத” கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் இரானி எச்சரித்துள்ளார்.

Read more: இதுவே உலகின் மிக மெதுவான ரயில்! 290 கி.மீ தூரத்தை கடக்க எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா..?

English Summary

Hope they don’t have a heart attack: Iran teases US with new weapon as talks stall

Next Post

கல்லூரி படிப்பு இல்லாமலே சாப்ட்வேர் வேலை.. ரூ. 10,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி..! செம வாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

Thu Apr 30 , 2026
Software job without college education.. Rs. 10,000 training with incentive..! Great opportunity.. Who can apply?
job

You May Like