2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..
தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது..
விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.. அதே போல் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.. வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக விஜய் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. எனினும் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை என்பதால் இப்போதைக்கு தொங்கு சட்டசபை உருவாகும் நிலை உள்ளது..
இந்த நிலையில் பனையூரில் இருந்து புறப்பட்ட விஜய் சென்னை அடையாறில் உள்ள வீட்டில் தவெக தலைவர் விஜய் தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார்.. அப்போது விஜய் சென்ற வழி நெடுகிலும் அவரது தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.. தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்ற விஜய் அவர்களிடம் ஆசி பெற்றார்.. விஜய்யை ஆரத்தழுவி சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்தார்.. தொடர்ந்து தொண்டர்களை பார்த்து விஜய் கையசையத்தார்..
தொடர்ந்து தான் வெற்றி பெற்ற சான்றிதை பெற விஜய் காரில் புறப்பட்டார்.. பலத்த பாதுகாப்புடன் செல்லும் விஜய்க்கு வழியெங்கும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்..
Read More : Flash: “புதிதாக பொறுப்பேற்கும் அரசிற்கு வாழ்த்துகள்..!” தவெக பெயரை குறிப்பிடாத உதயநிதி..! பரபர பேட்டி..



