BREAKING| கேரளாவின் புதிய முதலமைச்சர் V.D. சதீசன்..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

VD Satheesan 1

வி.டி. சதீசன் கேரளாவின் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கேரள பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


கேரள சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்த வி.டி. சதீசன், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி
கூட்டணியின் முக்கிய பிரச்சார முகமாக செயல்பட்டார். இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றி யூடிஎஃப் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் தொகுதியில் போட்டியிட்ட சதீசன் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்வாகினார். இந்த வெற்றிக்குப் பிறகு, அவரை முதலமைச்சர் பதவிக்கான முக்கிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், கட்சியின் இறுதி முடிவில் வி.டி. சதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 2021 தேர்தலில் 99 இடங்களை வென்றிருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி இம்முறை 35 இடங்களுக்கு சரிந்துள்ளது.

Read more: ‘திராவிடம்’ என்றால் என்ன..? தமிழக அரசியலில் இந்த சொல்லுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?

English Summary

VD Satheesan to be next Kerala Chief Minister

Next Post

மே மாத மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 விரைவில் வரவு வைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

Thu May 14 , 2026
May Women's Rights Amount Rs. 1000 will be credited soon.. Chief Minister Vijay's announcement..!
vijay 10

You May Like