தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது..
இதனிடையே 2 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு என்று தகவல் வெளியானது.. விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கிடைத்ததால் அவர் நாளை காளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.. அதே போல் தவெக ஆட்சியமைக்க விசிகவும் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை..
இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு அளிக்கவில்லை என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.. திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. அன்றும் இன்றும் என்றும் திமுக உடன் தான் கூட்டணி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது..
பெரும்பான்மைக்கு போதிய இடம் கிடைக்காததால் விஜய் முதல்வராக பதவியேற்பாரா என்பதில் மீண்டும் குழப்பம் நீடிக்கிறது..



