கடைசி நேரத்தில் சொதப்பும் ஆளுநர்.. விஜய் பதவி ஏற்பதில் மீண்டும் சிக்கல்..! என்ன ஆச்சு..?

vijay governor 2

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. 


இறுதியாக  திருமாவளவனின் முடிவே தவெக ஆட்சி அமைப்பதை தீர்மானிப்பதாக இருந்தது.  திருமாவளவனின் முடிவு என்ன என்பதை தமிழகமே உற்றி நோக்கிக் கொண்டிருந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு தேவையான 118 என்ற ’மேஜிக் நம்பர்’ கிடைத்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை பெற்றார். அதன் பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க விடுக்க மக்கள் பவனிற்கு சென்றார். ஆனால் ஆளுநர் அர்லேகரை சந்திக்க விஜய்க்கு நேரம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இன்று இரவு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் மீண்டும் பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு செல்கிறார்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா எப்போது நடைபெறும் என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளன. அதாவது ஞாயிற்றுகிழமை மே 10 நாளைக்குள் தவெக பதவியேற்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். ஆளுநரின் திடீர் கேரள பயணம் தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைத்த பிறகும் விஜய் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Read more: “துணை முதல்வராக திருமாவளவன்.. அமைச்சரவையிலும் விசிக பங்கு!” என்ன சொல்கிறார் வன்னியரசு..? கடைசி நேர அரசியல் ட்விஸ்ட்.!

English Summary

Governor resigns at the last minute.. Vijay faces another problem in taking office..! What’s going on..?

Next Post

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 18 இந்தியர்களுடன் சென்ற படகு தீ பிடித்து விபத்து.. ஒருவர் பலி..!

Sat May 9 , 2026
Indian Sailor Dies, 4 Injured After Boat Catches Fire, Sinks Near Hormuz
strait of hormuz iran

You May Like