“விஜயின் தாயை பார்த்தவுடன் ஓடி சென்று கட்டிப்பிடித்த த்ரிஷா..!” பதவியேற்பு விழாவில் கவனம் ஈர்த்த தருணம்..!

thrisha

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு ஆரம்பத்தில் இல்லாததால் அரசியல் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் விஜயை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.


தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து அரசியல் களம் பரபரப்பாக இருந்த நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் முக்கிய துறைகளின் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த சிபிஎம், சிபிஐ, விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை சந்திரசேகரும் விழாவில் பங்கேற்றனர். இதற்கிடையில், சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது நடிகை த்ரிஷாவின் வருகை. நீல நிற புடவையில் சிரித்தபடியே நேரு ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்த த்ரிஷாவை பல திரைத்துறை பிரபலங்கள் வரவேற்றனர்.

அதன்பிறகு, பதவியேற்பு விழா அரங்கில் விஜயின் தாய் சோபாவை பார்த்தவுடன் த்ரிஷா நேராக சென்று ஆரத்தழுவிய தருணம் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து, அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு கையசைத்தபடி தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Read more: மதுரையில் 14 தீர்த்தக் கிணறுகள் கொண்ட சிவபெருமான் கோவில்.. பால் சுவை கொண்ட நீரின் வரலாறு என்ன?

English Summary

“Trisha ran and hugged Vijay’s mother as soon as she saw her..!” The moment that caught the attention at the swearing-in ceremony..!

Next Post

விழா மேடையில் விஜய்.. விசில் சத்தத்தால் அதிரும் அரங்கம்.. இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்பு..!

Sun May 10 , 2026
Vijay on the stage.. the hall vibrates with the sound of whistles.. he will take oath in a moment..!
vijay 2 2

You May Like