தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு எதிராக வலுவான மக்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். முதல் முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெருவாரியான வாக்கு அளித்து முதலமைச்சராக்கியுள்ளனர். மற்ற தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து விஜய் மாறுபட்டவராக இருப்பார் என்பதே தமிழக மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
இதற்கேற்ப, இரண்டு வார காலத்திற்குள் பொது இடங்களில் இருந்து 717 மதுபானக் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் விஜய் அரசு எடுத்த முக்கிய நிர்வாக முடிவு தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய்யின் முதல் பெரும் தவறு என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தனது தனிப்பட்ட குழுவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரப்பூர்வ அரசுப் பதவியில் நியமித்துள்ளார். ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்னும் ஜோதிடர் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ளார். ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதே தற்போதைய சர்ச்சை.
தமிழகத்தில் முந்தைய நிர்வாகத்தின் மீதான முதன்மையான புகார்களில் ஒன்று, தங்களுக்கு நெருக்கமானவர்களை முக்கிய அரசுப் பதவிகளில் வைத்திருக்கும் போக்காக இருந்தது. விஜய் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது, அவர் வழக்கமான பணிகளிலிருந்து விலகி, அரசுப் பதவிகளைத் தகுதியானவர்களிடமே முழுமையாக வைத்திருப்பார் என்று மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் விஜய், தனது ஜோதிடரை முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமித்து, இந்த எண்ணத்தை தகர்த்துவிட்டதாக இணையவாசிகள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. புதிய அரசு தொடங்கிய ஆரம்பத்திலேயே எழுந்துள்ள இந்த சர்ச்சை, எதிர்காலத்தில் மேலும் அரசியல் விவாதங்களை உருவாக்குமா என்பது குறித்து அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
Read more: “120 + 30 ஆதரவு..?” சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. தவெக அரசின் பலம் என்ன..?



