நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு நடந்தது சிபிஐ விசாரணையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மத்திய அரசு தேர்வை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாணவர்கள் கடும் அதிருப்தியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக அரசியலிலும் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் இது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடாதது அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசின் தேர்வு முறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் மாநிலத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் விஜய் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் “நீட் இல்லாத தமிழ்நாடு” என்ற கோரிக்கை முக்கியமாக இடம்பெற்றிருந்த நிலையில், இந்தத் தேர்வு ரத்து மாணவர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருந்தாலும், மாநில அரசின் நிலைப்பாடு தெளிவாக இல்லாதது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
Read more: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. வரலாற்றில் முதல் முறை நேரலையில் ஒளிபரப்பு..!



