நேற்றும்.. இன்றும்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் விஜய்க்கே ஆதரவு..! – அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட MLA காமராஜ் அனல் பறக்க பேச்சு..!

kamaraj mla 1

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் தொடங்கியது. சட்டசபை கூட்டம் கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தின.


முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்து பதிவும் வாக்கெடுப்பு நடைமுறைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ் சட்டசபையில் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. அவர் பேசுகையில், “நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் என் ஆதரவு விஜய்க்கே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நாட்டு மக்களை காப்பாற்ற வந்திருக்கும் தவெக தலைவர் விஜய் என்னை காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா? முதலமைச்சர் விஜய் என்னை பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறினார். அதோடு, “முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 4 நாட்களிலேயே திருச்சியில் உள்ள ரவுடிகள் பலரும் சரணடைந்து விட்டனர்” எனவும் காமராஜ் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், காமராஜ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு உறுதியாகும் சூழலில், இந்த ஆதரவு தவெக அரசுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Read more: வாகன அணிவகுப்பின் அளவைக் குறைக்க பிரதமர் மோடி உத்தரவு.. அதிக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும் அட்வைஸ்..!

English Summary

My support will be for TVK for the next 5 years..! – Speech by MLA Kamaraj, who was expelled from AMMK

Next Post

Breaking : பெரும் அதிர்ச்சி.! ஒரே நாளில் ரூ.8,560 உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளி ரூ.30,000 உயர்வு..!

Wed May 13 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.  அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
jewel n

You May Like