சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதிக்கு அருகே உள்ள மதுபான கடையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரவியது. பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குள் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் போதை மற்றும் மதுபானங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் பதவி ஏற்ற மறுதினமே கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: என்ன மனுஷன்யா.. டிபன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த முதலமைச்சர் விஜய்.. வியப்பில் அதிகாரிகள்..!



