முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது என்பதை கண்டறிவதிலேயே குழப்பம் நீடிக்கிறது..
இப்படி போலி செய்திகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் தவெக கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி அதை தங்கள் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.. தவெகவினரின் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அதே போல் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இதை காட்டமாக விமர்சித்தனர்..
இந்த நிலையில் தவெகவினர் அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.. தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததை கொண்டாடி வருகின்றனர்.. எனவே நம் பொறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.. கட்சி தோழர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..
தவெகவினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் அரசு சார்ந்த அலுவலகங்களில் தலையிடவோ ஆய்வு மேற்கொள்ளவோ கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.. மேலும் தவெகவினர் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும் எனவும், ஆனால் தங்கள் எல்லை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.. தவெகவும் முதல்வரின் நற்பெயருக்கும் எந்த களங்கமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது தலையாய கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
Read More : பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது ஒழிக்கப்படுமா..? மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்..!



