Flash : தமிழகத்தையே உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு.. முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

tuticorin girl case

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்..


போலீசார் மாணவியை தேடி வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாலையில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

குற்றவாளியை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி உறவினர்களும் கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையில் கடந்த மார்ச் 19-ம் தேதி சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.. செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது அதன் அடிப்படையில் முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரால் கைது செய்யபப்ட்ட முனீஸ்வரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த சம்பவம் நடந்த 20 நாட்களில் குற்றப்பத்திரைகை தாக்கல் செய்யப்பட்ட, இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..

இந்த நிலையில், விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று மதியம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சம்பவம் நடந்த இரண்டரை மாதங்களில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

Read More : மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போ வரும்..? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அப்டேட்!

English Summary

The POCSO Court has delivered a verdict declaring Muneeswaran—who was arrested in connection with the Vilathikulam student case that shook the entire state of Tamil Nadu—to be guilty.

RUPA

Next Post

Flash : சென்னை மணலியில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்..!

Mon May 25 , 2026
சென்னையை மணலி அருகே தனியார் எண்ணை தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து..
chennai fire oil factory

You May Like