பணம் கொடுத்தால் தான் கடவுளை கட்டியணைக்க முடியுமா..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

temple government

கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு என ஏன் தனியாக நேரம் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது..

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழ்நாடு பிரிவின் தலைவர் சொக்கலிங்கம் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ பணத்தின் அடிப்படையில் பக்தர்களிடையே பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் விரோதமானது. இதனால் சாமானிய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனினும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு இலவச சிறப்பு தரிசனம் வழங்கலாம் ..”என கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது கடவுள் முன்பு அனைவரும் என்ற நிலையில் விஐபி தரிசனம் ஏன் என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சாமி தரிசனத்திற்கு கட்டணம் கட்டாயம் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. அந்த கட்டணம் கோயிலுக்கு வருவாயாக உள்ளது எனவும் பதிலளித்தார்.. மேலும் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்..

அப்போது நீதிபதிகள் பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா..? யாருக்கும் சலுகை காட்டாதீர்கள்.. விஐபிக்களுக்கு தரிசனத்திற்கு தனியாக ஏன் நேரம் ஒதுக்கக்கூடாது என யோசனை தெரிவித்தனர்.. மேலும் 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்..

Read More : ”அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்..” அமைச்சர் நிர்மல் குமார் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

English Summary

The Chennai High Court has questioned why a separate time slot should not be allotted for VIP darshan in temples.

RUPA

Next Post

ஜூன் 16 முதல் இந்த ராசிக்காரர்களின் வருமானம், அதிகாரம் டபுளாகும்.. ஜாக்பாட் உறுதி..!

Fri May 29 , 2026
Free from the influence of other planets, the Sun is likely to function with great independence and completeness.
zodiac 1

You May Like