Breaking : தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை.. விளாத்திக்குளம் மாணவி வழக்கு.. நீதிமன்றம் அதிரடி..!

vilathikulam rape

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்..


போலீசார் மாணவியை தேடி வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாலையில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம், உடலில் காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் கடந்த மார்ச் 19-ம் தேதி சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.. தனிப்படை போலீசாரால் கைது செய்யபப்ட்ட முனீஸ்வரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த சம்பவம் நடந்த 20 நாட்களில் குற்றப்பத்திரைகை தாக்கல் செய்யப்பட்டது.. மேலும், இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று மதியம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் விளாத்திக்குளம் மாணவி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி நிலையில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.. சம்பவம் நடந்த இரண்டரை மாதங்களில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது..

Read More : உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது? இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா..? CM விஜய்யை விளாசிய உதயநிதி..!

RUPA

Next Post

வாயு, அமிலத்தன்மைப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை இல்லை! காலையில் இதைச் செய்தால், நிவாரணம் கிடைக்கும்..!

Mon May 25 , 2026
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் அமிலத்தன்மை (acidity) போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க, சில குறிப்பிட்ட காலை நேர நடைமுறைகளைப் பின்பற்றுவது சிறந்தது என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இக்காலத்தில், ஏறக்குறைய அனைவரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். காலை உணவாக ரொட்டி மற்றும் வெண்ணெய், மதிய உணவாகக் கனமான மற்றும் […]
gas acdity 1

You May Like