2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மாலை பிரதமருடன் சந்திப்பு..!

pm modi cm vijay

முதல்வர் விஜய், 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.. அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்திற்கும் அவர் முதன்முறையாக செல்ல உள்ளார்.. அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது..


இதை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்திக்கிறார்.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை, பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்க உள்ளார்..

மேலும் முதல்வர் விஜய் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அதே போல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்..

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை முதல்வர் விஜய் நாளை சந்திக்க உள்ளார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது..

RUPA

Next Post

தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு எதிராக சதி செய்தோமா..? வருத்தத்துடன் பேசிய திருமா..!

Wed May 27 , 2026
VCK leader Thol. Thirumavalavan has appealed to his party members not to stage protests against the DMK.
mk stalin thol thirumavalavan

You May Like