தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன..
அதன்படி தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.. வன்னிஅரசுக்கு சமூக நீதித்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையின நலத்துறையும் ஒதுக்கப்படுள்ளது..
முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் கூறிவந்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது.. இதையடுத்து திமுக தரப்பு விசிகவை கடுமையாக விமர்சித்தது. திமுக எம்.பி. ஆ.ராசா, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்..
இந்த சூழலில் நேற்று பெரம்பலூரில் திமுக – விசிகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.. கற்களை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.. இதுகுறித்து குன்னம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் விசிக மற்றும் திமுகவை சேர்ந்த 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய அவர் “ திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெக உடன் நாம் கைகோர்த்துள்ளோம்.. நாம் எடுத்த இந்த முடிவை ஆ.ராஜா உட்பட பலர் விமர்சித்தார்கள் என்பது சற்று வலியை தருகிறது.. ஆனாலும் அவர்கள் ஆதங்கப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்..
தவெக உடன் களத்தில் நிற்பதை அவ்வளவு எளிதாக எப்படி திமுக தொண்டர்களால் கடந்து செல்ல முடியும்.. கடும் சொற்களால் விமர்சிக்க வேண்டாம் என்று அண்ணா மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்..
ஆ.ராஜாவை விமர்சிப்பதோ, திமுகவை விமர்சனம் செய்வதோ, திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்துவதோ தேவையற்றது.. அதை தவிர கட்சி பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.. நம்மை பிடிக்காதவர்கள் எப்போதும் விமர்சித்து கொண்டு தான் இருப்பார்கள்.. நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிப்பார்கள்.. காழ்ப்புணர்ச்சியில் அவதூறுகளை பரப்புவார்கள்..
திமுகவுக்கு ஆதரவளித்தாலும் விமர்சிப்பார்கள், திமுகவுக்கு எதிராக நின்றாலும் விமர்சிப்பார்கள்.. காங்கிரஸ் செய்த துரோகத்தை விட விசிக செய்த துரோகம் பெரிது என்று கூலிக்கு மாரடிக்கும் கும்பல் நமக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.. தேர்தலுக்கு முன்னரே ஆதவுடன் சேர்ந்து சதி செய்ததாக சிலர் கூறுகின்றனர்.. நாம் எப்படி உண்மையாக இருந்தோம் என்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியும்.. எனவே இந்த பிரச்சனையை ஊதி பெருக்க வேண்டாம் விட்டுவிடுங்கள்..” என்று தெரிவித்தார்..
Read More : 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மாலை பிரதமருடன் சந்திப்பு..!



