தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்..! யார் இவர்..?

tn new dgp mahesh kumar agarwal

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரதோருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


டிஜிபி நியமன விவகாரத்தில் முந்தைய திமுக அரசுக்கும், யுபிஎஸ்.சிக்கும் இடையே மாதக்கணக்கில் இணக்கமற்ற நிலை நீடித்து வந்தது.. இதன் காரணமாக திமுக ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மூத்த அதிகாரிகளில் இளைவரான வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்..

இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் அவர் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபி மற்றும் காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார்..

இந்த சூழலில் தேர்தல் காலத்தில் டிஜிபி தேர்வுக்கான கூட்டத் தேதி வந்ததால், தேர்தலுக்கு பின் அந்த கூட்டத்தை யுபிஎஸ்.சி தள்ளிவைத்தது.. இதையடுத்து செவ்வாய்க்கிழமை யுபிஎஸ்சி- டிஜிபி நியமனத்திற்கான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.. இதில் யுபிஎஸ்சி மற்றும் மத்திய உள்துறை உயரதிகாரிகள் தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

அதில் பதவி மூப்பு அடிப்படையில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 உயரதிகாரிகளின் பெயர்களுக்கு தேர்வாணையம் ஒப்புதல் வழங்கியது.. இந்த சூழலில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்..

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்..?

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், 1994-ம் ஆண்டு தனது 22வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக கேடர் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.. தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், போக்குவரத்து துணை ஆணையராகவும் அவர் பணியாற்றி உள்ளார்..

சிபிஐயில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு, இன்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு, சேலம் ரயிலில் நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு போன்றவற்றை மிகச்சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர்..

2020-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அவர், தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை டிஜிபியாகவு இருந்தார்.. தற்போது எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநாராக அவர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பணம் கொடுத்தால் தான் கடவுளை கட்டியணைக்க முடியுமா..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

English Summary

Mahesh Kumar Agarwal has been appointed as the new DGP of Tamil Nadu.

RUPA

Next Post

Breaking : ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு..!

Fri May 29 , 2026
The Tamil Nadu government has issued orders transferring IAS officers in the state.
Tn Govt 2025

You May Like