அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு..? விரைவில் தனிக்கட்சி அறிவிப்பு..! பரபரக்கும் அரசியல் களம்..!

annamalai rajini

கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது..


இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட அண்ணாமலையில் இந்த திடீர் திட்டம், தமிழக அரசியலில் புதிய களத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன..

பாஜக மேலிடத்தில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், அண்ணாமலை தனக்கென தனி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்ததாகவும் தெரிகிறது.. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையையும் அண்ணாமலை தொடங்க உள்ளார்.. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் தனது புதிய கட்சியின் வேட்பாளர்களையும் நிறுத்த அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.. பூத் அளவில் ஏற்கனவே ரகசிய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த சூழலில் அண்ணாமலை, ஆன்மீக பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.. பயணத்தை முடித்து விரைவில் சென்னை திரும்ப உள்ளார்.. சென்னை வந்த உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. அண்ணாமலையின் நேர்மை, துடிப்பு மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ரஜினிக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் அவரின் புதிய கட்சிக்கு ரஜினி முழு ஆதரவு அளிக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது..

ரஜினி மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களும் அண்ணாமலைக்கு திரைமறைவில் ஆதரவளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..

எனினும் அண்ணாமலையின் தனிக்கட்சி முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்திய முக்கிய முகங்களில் அண்ணாமலையும் ஒருவர்.. அவர் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.. சென்னை திரும்பியதும் அண்ணாமலை வெளியிடப்போகும் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் அது தமிழக அரசியல் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..!

Read More : “தேர்தலுக்கு முன்பு வாய் கிழிய பஞ்ச் டயலாக்.. முதல்வரானதும் Deep Sleep Mode.. தமிழ்நாடு தாங்காது CM Sir..” உதயநிதி காட்டம்..!

English Summary

It is said that there is a strong possibility that Rajini will extend his full support to Annamalai’s new party.

RUPA

Next Post

இந்தியாவில் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 எண் தான்..! 3 மாதங்களில் வரப்போகும் முக்கிய மாற்றம்..!

Sat May 30 , 2026
India's sole emergency helpline, '112', is gearing up for a major overhaul.
emergency helpline

You May Like