“தேர்தலுக்கு முன்பு வாய் கிழிய பஞ்ச் டயலாக்.. முதல்வரானதும் Deep Sleep Mode.. தமிழ்நாடு தாங்காது CM Sir..” உதயநிதி காட்டம்..!

cm vijay udhaynidhi

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் பதிவாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் சமீபத்தில் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அதே போல் சென்னையில் மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..

இந்த நிலையில் கடலூரில் 25 வயதான பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.

இந்த SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல. தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.

பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.

சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ”அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்..” அமைச்சர் நிர்மல் குமார் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

English Summary

Opposition Leader Udhayanidhi Stalin has strongly condemned the brutal murder of a 25-year-old woman in Cuddalore.

RUPA

Next Post

3 ஆண்டுகளில் சந்தைக்கு வர உள்ள புதிய பெட்ரோல்..! மத்திய அரசின் திட்டம் இதுதான்..!

Fri May 29 , 2026
The Central Government plans to introduce E25 as the next phase following E20.
petrol diesel 3

You May Like