Breaking : ஒரே நாளில் ரூ.3,200 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி ரூ.10,000 சரிவு..! துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்..!

gold jewlery

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : ஒருவர் இறந்த பிறகு வங்கி நிதியை யார் பெற முடியும்? ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய RBI வழிகாட்டுதல்கள்..!

English Summary

In Chennai today, the price of ornamental gold has decreased by ₹3,200 per sovereign, and it is being sold at ₹1,10,400.

RUPA

Next Post

மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!

Wed Jun 10 , 2026
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]
bharathi raja vijay

You May Like