விவசாயிகளின் வலிகள், வேதனைகள் புரியாமல் வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்ட பொய்க்கால் குதிரை அரசு.. விஜய் அரசை சாடிய இபிஎஸ்..!

eps vijay n

ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்..


இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெற்று ஏமாற்று அறிவிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடுமையாக சாடி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது. குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.

ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.

ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : Breaking : விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. ரூ.134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!

RUPA

Next Post

சேலத்தில் ஒர் பொள்ளாச்சி சம்பவம்..? 50+ பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர்.. நண்பர்களுக்கும் இரையாக்கிய கொடூரம்..!

Fri Jun 12 , 2026
சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக தவெக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.. 10-க்கும் மேற்பட்ட பென்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலம் ஆணையருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளார்.. இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. விசாரணைக்காக […]
gang rape

You May Like