சவாலும், சவடாலும் விட்டவர், எப்போது Silent mode-இல் இருந்து வெளியே வருவார்..? CM விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி..!

mk stalin joseph vijay jpg 1 1

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன..


இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது.. திருவள்ளூர், அம்பத்தூர், அண்ணாசாலை, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது.. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்.. சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் – சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

Read More : 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்.. முதுகெலும்பற்ற முதல்வரே, இதுதான் நீங்கள் சொன்ன அந்த மகத்தான மாற்றமா..? கொந்தளத்த திமுக..!

RUPA

Next Post

நீங்கள் ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் பண்றீங்களா..? இதனால் ஏற்படும் விளைவுகள் தெரிந்தால், தொடக் கூட மாட்டீங்க..!

Tue Jun 16 , 2026
ஸ்மார்ட்போன்கள், வைஃபை (Wi-Fi) சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை (RF) கதிர்வீச்சு குறித்து உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எக்ஸ்-கதிர்கள் (X-rays) போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு (ionizing radiation) ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செல்போன்களில் இருந்து வெளிப்படுவது குறைந்த ஆற்றல் கொண்ட ‘அயனியாக்காத கதிர்வீச்சு’ (non-ionizing radiation) ஆகும். இது மூளைப் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில ஆய்வுகள் கலவையான […]
smart phone 3

You May Like