வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு..!

Mukund Varadarajan Salai

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரை சூட்ட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தாம்பரம் ரயில் நிலைய சாலை முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி ஸ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்க விடுத்த நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. இந்திய நாட்டிற்காக போராடி உயர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தை போற்றும் வகையில் வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜன் தாம்பரம் மாநகராட்சி அனந்தபுரத்தை சேர்ந்தவர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார்.. 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25 ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்தார்..

மேஜர் முகுந்த் வரதராஜனின் அசாத்திய தைரியம், தியாகம், வீரத்தை பாரட்டி இந்திய ராணுவத்தின் உயரிய விருதான அசோக் சக்ரா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது..

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது தான் அமரன் படம். இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.. முகுந்த் மனைவி கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மக்கள் பணம் ரூ.1 கோடி வேஸ்ட்..! CM ஜோசப் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல், செயலில் காட்ட வேண்டும்..! நயினார் விளாசல்..!

RUPA

Next Post

3 பேர் பலி, இதுவரை 21 பேர் மீட்பு..! மேற்கு வங்கத்தில் கிடங்கு இடிந்து விழுந்து விபத்து.. மீட்புப் பணிகள் தீவிரம்..!

Wed Jun 24 , 2026
மேற்கு கொல்கத்தாவின் தாரதாலா பகுதியில் புதன்கிழமை மதியம் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கிடங்கு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர், சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சுமார் 12 முதல் 18 பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும், அவர்கள் இந்திய ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் சுவேந்து அதிகாரி இதுகுறித்து […]
building collapse

You May Like