மக்கள் பணம் ரூ.1 கோடி வேஸ்ட்..! CM ஜோசப் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல், செயலில் காட்ட வேண்டும்..! நயினார் விளாசல்..!

vijay nainaar 2

விளம்பர மோகத்தால் திரு. ஜோசப் விஜய் அரசு மக்கள் பணத்தை வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்..


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ரூ.40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ரூ.1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?

“மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்” என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “நயினார் நாகேந்திரன் காமெடி பீஸ். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..” அமைச்சர் செங்கோட்டையன் அட்டாக்..!

RUPA

Next Post

கணவருக்கான கடமைகளை நிறைவேற்றாத தாயிடம், குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருக்கும்: நீதிமன்றம் அதிரடி..!

Wed Jun 24 , 2026
சிங்கப்பூரில் வசிக்கும் தந்தையிடம் ஒன்பது வயது சிறுவனின் இடைக்காலப் பொறுப்பை (custody) ஒப்படைக்க புனே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய் நீதிமன்றத்தின் பல உத்தரவுகளைப் புறக்கணித்ததோடு, தந்தையைத் தன் மகனுடன் சந்திக்க விடாமல் பலமுறை தடுத்ததால், தந்தையிடமே குழந்தையின் நலன் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்று நீதிமன்றம் கருதியது. ஒரு பெண் தனது திருமண உறுதிமொழிகளைக் காப்பாற்ற வேண்டும், கணவரை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கவனித்துக்கொள்ள வேண்டும், அவருக்காகப் […]
court judgement

You May Like