மருமகள் மீது ஏற்பட்ட மோகம்… அதிகாலையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

சென்னை பல்லாவரம் அருகே மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில் மாமனார் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூர், கஸ்தூரி பாய் நகரை சேந்தவர் 58 வயதான பெருமாள். மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு 32 வயதான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. 28 வயதான மீனாவிற்கு தற்போது, 8 வயதான ஈஸ்வரி என்ற மகளும், 4 வயதான சரண் என்ற மகனும் உள்ளனர்.

இதனிடையே, உடல் நலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் , கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். கணவரை இழந்த மீனா, தனது கணவன் வீட்டிலேயே மாமனாருடன் வசித்து வந்துள்ளார். மருமகளுடன் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக்க நினைத்த பெருமாள், தனது மருமகளிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, தனது மாமனாரை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொல்லாத பெருமாள், மீண்டும் நேற்று அதிகாலையில் மீனாவை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதனால் குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்த மீனா ஆதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், தனது மாமனாரை எச்சரித்துள்ளார். ஆனால் அவரது மாமனார் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மீனா, சமயலறைக்குச் சென்று அரிவாள்மனை எடுத்து வந்து பெருமாளின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: காதலிக்கு பர்த்டே கிப்ட் கொடுக்க முயன்ற வாலிபர்; கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..

Saranya

Next Post

“பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்… தட்டுல ஒன்னு கூட மிஞ்சாது!

Thu Jul 2 , 2026
மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீயுடன் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குறிப்பாக பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், வீட்டில் என்ன சாப்பிடலாம் என்று எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த நேரத்தில் அவசரமாக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த சிப்ஸ், பிஸ்கட்கள் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். ஆனால் அவை குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை […]
images 7

You May Like