“அவன் கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்ல, என் கூட வந்துருமா” 19 வயது மகளின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்..

f32df33f0eecb95e81ff34d39418d674

காதல் திருமணம் என்பது இன்னும் பல பெற்றோரால் வெறுக்கப்படும், ஏன் அருவருக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்கள் பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் இந்த சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதே நேரத்தில், காதல் திருமணம் செய்த தனது மகளின் காலில் விழுந்து கெஞ்சும் பெற்றோரைப் பார்க்கும் போது, அது பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி லாரி செட் பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவருக்கு பிரவீனா என்ற மனைவியும், 19 வயதான திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் திவ்யதர்ஷினி, ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரை காதலித்துள்ளார்.

23 வயதான பெருமாள், ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வரும் திருப்பதி என்பவரது மகன். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் காதல் உறவு குறித்து திவ்யதர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் காதலை பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில், திவ்யதர்ஷினி கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு பெருமாளுடன் சென்று விட்டார்.

மேலும், இருவரும் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இருவரும் ஒரே சாதி என்பதை அறிந்து கொண்ட மகளிர் போலீசார், பெற்றோர்களை போனில் அழைத்து தகவல் கூறியுள்ளனர். இதனை கேட்டு காவல் நிலையத்திற்கு திவ்யதர்ஷினியின் தாய் கவிதா, தந்தை காளி மற்றும் உறவினர்கள் ஆகியோர் வந்தனர்.

அப்போது போலீசார் முன்னிலையில், திவ்யதர்ஷினியின் காலில் விழுந்த அவரது தந்தை காளி, தங்களுடன் வருமாறு கால்களைப் பிடித்து கெஞ்சி அழுதார். அவருடன் தாய் கவிதாவும் கெஞ்சி கதறி அழுதார். ஆனால் திவ்யதர்ஷினி அதை எதையுமே கண்டுக்கொள்ளவில்லை. மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவ்யதர்ஷினியின் தந்தை காளி, “பெருமாளுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. குடி பழக்கம், கஞ்சா பழக்கமும் அதிகமாக இருக்கிறது. அவருக்கு இல்லாத கெட்டப்பழக்கமே கிடையாது. அவர் பெண் பொறுக்கி.. நகையை பறிப்பது, சொத்தை எழுதி வாங்குவது, பணம் வாங்குவது போன்ற செயல்களை செய்பவர்.. என் பெண்ணிடம் பணம் வாங்கி தின்றுள்ளார் என்று கடுமையாக கூறினார்.

Also Read: “உடம்பெல்லாம் எரியுது.. என்ன விட்டுருங்க” கதறித் துடித்த சிறுமி; இரக்கமின்றி சித்தி செய்த கொடூரம்!!

Saranya

Next Post

11 மாத குழந்தை கொடூரக் கொலை; நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்..

Wed Jul 8 , 2026
பெங்களூரு, கிட்டகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகப்பா. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 11 மாத குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்களின் குழந்தையை ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்த […]
5887df8f13a0b7da99e73ced49376974

You May Like