குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றங்களை கவனித்து, அவர்கள் எந்த அசௌகரியத்தையும் தயக்கமின்றி பகிரக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.
https://www.instagram.com/reel/Da9hY2OJdeR/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
ஜியாகுடா பகுதியில் தேநீர் விற்பனை செய்து வருபவர் 55 வயதான அப்துல் அஜீஸ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டிற்க்கு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 9 வயது சிறுமி ஒருவர் தனியாக ஒரு வண்டியின் மீது அமர்ந்திருப்பதை இவர் பார்த்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்த அஜீஸ், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அஜீஸ் கையை பலமுறை தட்டி விட்டுள்ளார். மேலும், இவனிடம் இருந்து விலக சிறுமி திரும்பியும் உட்கார்ந்துள்ளார். ஆனால் அஜீஸ் விடாமல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், வீட்டருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது அஜீஸ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், அஜிஸை தடிகளால் தாக்கி, உதைத்து, குத்தியுள்ளனர். இதனால் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அஜீஸுக்கு முதலுதவி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அஜிஸை உஸ்மானியா பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரவு சுமார் 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குல்சும்புரா போலீசார், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவு 105 மற்றும் 3(5)-ன் கீழ் அஜிஸை தாக்கிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: ரூ.15 ஆயிரத்திற்கு கட்டுவிரியன் பாம்புகளை வாங்கிய பெண்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!



