தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதான ரோஷினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2022 முதல் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அப்போது ரோஷினி, இந்த குழந்தை உன்னால் தான் பிறந்தது என்று விஜயகுமாரிடம் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், இந்த காரியம் குறித்து நான் உனது மனைவியிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன விஜயகுமார், நன்றாக இருக்கும் என் வாழ்கையை கெடுத்து விடாதே என்று கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரோஷினி, விஜயகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இப்படி விஜயகுமாரை மிரட்டி ரோஷினி ரூ.5 கோடி வரை பணம் பறித்துள்ளார். அது மட்டும் இல்லாமல், மலையின் கீழ் பகுதியில் உள்ள 22 சென்ட் நிலத்தை தனது பெயரில் பதிவு செய்ய வைத்துள்ளார். மேலும், 45 சவரன் தாங்க நகைகளையும் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், ரோஷினியின் செயலால் விரக்தி அடைந்த விஜயகுமார் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
அதன் படி, விஜயகுமார் வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரோஷினியை கைது செய்தனர். மேலும், ரோஷினிக்கு உடந்தையாக இருந்த ஜிபின், உன்னிமோள் ஜிபின், அபிஷேக் ஆகியோரை தேடி வருகின்றனர். இதற்கிடையே கைதான ரோஷினிக்கு கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளது. மேலும் ரோஷினி கூறுகையில், “நானும் விஜயகுமாரும் திருமணம் செய்து தொழிலில் பங்குதாரராக தான் இருந்தோம், ஆனால் அவர் இப்போது பொய்யான புகார் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Also Read: “சார்… நான் கள்ளக்காதல் தான் பண்ணேன்!” – போலீசுக்கு லஞ்சம் கொடுத்த நபர்… இறுதியில் நடந்த அதிரடி!



