சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வரும் ஒவ்வொரு குற்றவாளியும் உண்மையில் திருந்துகிறார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மனநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சத்தீஸ்கரில், ஏற்கனவே இதேபோன்ற கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நபர், மீண்டும் அதேபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில் 50 வயது பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 42 வயது நபரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணை கொலை செய்த பிறகு அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, குற்றம் தொடர்பாக அவர் அளித்த தகவல்கள் விசாரணை அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர் கடந்த 2017-ம் ஆண்டு இதேபோன்ற கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறைத்தண்டனையை அனுபவித்து வெளியே வந்த பிறகும், மீண்டும் அதேபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடுமையான குற்றத்தில் தண்டனை பெற்ற ஒருவர் மீண்டும் இதேபோன்ற குற்றத்தில் சிக்கியிருப்பது, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
Also Read: பெற்றோர்களே கவனம்! வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி, 15 வயது சிறுமிக்கு 60 வயது முதியவர் செய்த காரியம்!



