சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..!! தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்..!!

Rain Flight 2026

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.


இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 விமானங்கள் வானில் வட்டமடித்தன.

மேலும், புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த ஹெலிகாப்டரும் மீனம்பாக்கத்தில் தரையிறங்க முடியவில்லை. தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் அமித்ஷா விமான நிலையம் சென்றடைந்தார்.

Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..!! சட்டமன்றத்தில் இன்று நிறைவேறுகிறது தனித் தீர்மானம்..!!

Mon Aug 10 , 2026
தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு […]
vijay assembly

You May Like