புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?. அறிவியல் மற்றும் ஆன்மீக காரணம் இதுதான்!.

non veg food

தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசியில், பல குடும்பங்களில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பதும், விரதமிருந்து வழிபாடுகளில் ஈடுபடுவதும் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். இதற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகள் மட்டுமன்றி, அறிவியல் சார்ந்த உடல்நலக் காரணங்களும் அடங்கியுள்ளன.


அறிவியல் காரணம்: புரட்டாசி மாதம் என்பது வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கும் ஒரு இடைப்பட்ட பருவக்காலமாகும். கோடை காலத்தில் பூமியில் தேங்கியிருந்த வெப்பம், மழைத் துளிகள் விழும்போது வெளியில் வரத் தொடங்கும். இதனால் வளிமண்டலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகைய காலநிலை மாற்றத்தின்போது மனித உடலில் இயல்பாகவே வெப்பம் அதிகரிக்கும். அந்நேரத்தில் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் அசைவ உணவுகளை உட்கொண்டால், உடல் சூடு மேலும் அதிகரித்து வயிறு சார்ந்த கோளாறுகள், தோலில் வறட்சி, அதிக வியர்வை மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும்.

பருவகால மாற்றத்தின்போது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைய வாய்ப்புள்ளதால், எளிய முறையில் செரிமானமாகும் சைவ உணவுகளையும், உடலைக் குளிர்விக்கும் துளசி தீர்த்தத்தையும் உட்கொள்வது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆன்மீகக் காரணம்: ஜோதிடக் கணக்கீட்டின்படி, கன்னி ராசிக்கு உரிய மாதமாகப் புரட்டாசி கருதப்படுகிறது. கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவான், மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். புதன் கிரகம் சைவ உணவோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால், அவருக்குரிய இந்த மாதத்தில் அசைவத்தைத் தவிர்த்து, பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்தத்துடன் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு என்ற நம்பிக்கை நிலவுகிறது.

நம் முன்னோர்கள் மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டே, பருவகால மாற்றத்திற்கு ஏற்ப உணவுக் கட்டுப்பாடுகளையும் ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் இணைத்துப் பழக்கப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்.

1newsnationuser5

Next Post

டிரம்பிற்கு இறுதி வார்னிங்!. 7 நிபந்தனைகளை ஏற்காவிட்டால் போருக்கு தயார்!. 'கோட் 100' உச்சக்கட்ட எச்சரிக்கை விடுத்த ஈரான்!

Sun Sep 20 , 2026
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கத்தார் நாட்டின் மூலமாக 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாவிட்டால், தீர்க்கமான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei), கத்தார் மூலமாகத் தங்களது நிபந்தனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், […]
iran us deal

You May Like