“அம்மா வேணும்” கதறும் 3 குழந்தைகள்.. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்!

87d0ffebadda9125ee03ef7b99a7938be484655524702c67a478f0375240e468

கர்நாடக மாநிலம் வணகெரே மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 36 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


டவுன் சேகரப்பா பகுதியைச் சேர்ந்த நாகரத்னா (45), மூன்று குழந்தைகளின் தாய். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சம்பவத்தன்று நாகராஜ் நாகரத்னாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், நாகராஜ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் நாகரத்னாவின் கழுத்தை அறுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த நாகரத்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நாகராஜை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

ஆத்திரமடைந்த சிலர் நாகராஜை அருகில் இருந்த தென்னை மரத்தில் கயிற்றால் கட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த டவுன் போலீஸார், நாகராஜை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, நாகரத்னாவின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கொலைக்கான காரணம், சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதும், சந்தேக நபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கியதும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாயை இழந்த 3 குழந்தைகளும், தங்களின் தாய் வேண்டும் என்று கதறும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இனி பெட்ரோல் பங்குகளில் UPI பேமெண்ட் செய்ய முடியாதா?.. IndianOil அளித்த விளக்கம்!

Saranya

Next Post

பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி?.. சத்துணவு திட்டத்தில் வரப்போகும் புதிய மாற்றம்!

Sun Sep 20 , 2026
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அடுத்தகட்ட விரிவாக்கத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் புதிய வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் சிக்கன் பிரியாணியை இடம்பெறச் செய்வது குறித்த பரிசீலனையும் கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் […]
Rajmohan 2026 1

You May Like