3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100% குதிரை பேரம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுக எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசமாக தவெகவில் இணைந்துள்ளனர்.. ராஜினாமா செய்த கையோடு உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்திக்கின்றனர்.. மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை..
பொதுவாக எம்.எல்.ஏ ராஜினாமா செய்யும் போது, சபாநாயகர் பரிசீலனை செய்ய வேண்டும்.. அதை செய்யாமல் உடனடியாக ஏற்க வேண்டிய அவசியம் என்ன..? தவெக குதிரை பேரத்தை நடத்தி இருக்கிறது.. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.. ஏற்கனவே அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவுக்கு ஆதரவளித்ததே தவறு. அதற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம்.. எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர் எந்த பரிசீலனையும் செய்யாமல் ராஜினாமாக்களை ஏற்றது தான் குதிரை பேரம்..
தூய சக்தி என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த விஜய், வேறொரு கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை திருடி செல்வது நியாமா என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்..” என்று தெரிவித்தார்..
அதிமுகவில் தொடரும் குழப்பம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது.. இந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து இன்று இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்.. இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் 5 எம்.எல்.ஏக்கள் மீண்டும் இபிஎஸ் உடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது..
இந்த நிலையில். எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் சபநாயகர் ஜே.சி.டி பிரபாகரனிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : MLA பதவியை ராஜினாமா செய்த 3 பேரின் மனுக்களும் ஏற்பு.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு..!



