SIR-ல் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன?.. திமுக எழுப்பிய கேள்வியால் பரபரப்பு!

rahul gandhi

தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரம் தொடர்பாக திமுகவும் காங்கிரஸும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் SIR-க்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் இதே விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.


திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது ஏற்பட்டுள்ள வாக்காளர் பெயர் நீக்கங்கள் குறித்து ராகுல் காந்தி ஏன் குரல் எழுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும், SIR முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகள் கலைக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவிக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் SIR குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து மவுனம் காப்பதன் பின்னணி என்ன என்றும், நடிகர் விஜய் குறித்த அச்சம் காரணமாக இதுபற்றி பேசாமல் இருக்கிறாரா என்றும் சரவணன் அண்ணாதுரை தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்தும் தேசிய அளவில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் சட்டப்பூர்வ தன்மை குறித்த கேள்விகளை கார்கே முன்வைத்திருந்தார்.

அதிகாரப்பூர்வ தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் இருப்பதாக குற்றம்சாட்டிய கார்கே, SIR நடைபெறும் சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளதாக பாஜக விமர்சித்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கார்கேவின் கருத்துக்கு எதிராக கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கிடையே, SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

பாராளுமன்ற வீதியில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி சென்ற பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் அப்போது தடுத்து வைக்கப்பட்டனர்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராகுல் காந்தி தடுப்புகளை தாண்டி சென்று தேசியக் கொடியை அசைத்தார். தொடர்ந்து அவர், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆகாஷ்வாணி வளாகத்திற்குள் சென்றார்.

டெல்லியில் SIR-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டை திமுக வெளிப்படையாக கேள்வி எழுப்பியிருப்பது கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Also Read: வீட்டில் 150 சவரன் நகை மாயம்.. குழந்தையுடன் காணாமல் போன மனைவி கேரளாவில் கைது!

Saranya

Next Post

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 5 மாணவர்கள்.. 4 பேர் உயிரிழப்பு..

Wed Oct 7 , 2026
உத்தரப் பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள குடியிருப்பு குருகுலத்தில் நிலத்தடி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 5 மாணவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நச்சு வாயு தாக்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரா மாவட்டம் விரிந்தாவனின் சைதன்ய விஹார் பகுதியில் இந்த குருகுலம் […]
3906002058add01ef2702ff71307da2b94862fbae6b5a2c0ba8de7ec8004f80c

You May Like