கணவருடன் வாக்குவாதம்.. பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த மனைவி.. அடுத்தடுத்து நடந்த சோகம்!

dead body

திருவள்ளூர் அருகே ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. மது அருந்திவிட்டு வந்த கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காக்களூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்த யுவராஜ் (29), மஞ்சுளா (22) தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. கூலித் தொழிலாளியான யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நேரங்களில் தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி யுவராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மஞ்சுளாவையும் தனது தந்தையையும் யுவராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மஞ்சுளா, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.

மனைவி மருந்தைக் குடித்ததைக் கண்ட யுவராஜும் அதையே குடித்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டனர்.

அங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: செல்ஃபி எடுப்பது போல நடித்து காதலனைப் பள்ளத்தில் தள்ளிய காதலி.. அதிர்ச்சி பின்னணி!

Saranya

Next Post

கொதிக்கும் பசிபிக் பெருங்கடல்!. 10 டிகிரிக்கும் மேல் சூடான கடல் நீர்!. உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து!

Tue Oct 13 , 2026
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Nino) தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், பெருங்கடலின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொதிநிலையை அடைந்துள்ளது. குறிப்பாக பெரு நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் நீர் இயல்பான அளவை விட மிகக் கடுமையாகச் சூடாகி வருகிறது. பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாகப் […]
El Nino boiling oceans 30kb

You May Like