குழந்தைகளின் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வயது வரம்பு கிடையாது!. ‘பெற்றோர் கண்காணிப்பு தான் தீர்வு’!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Internet child SC 30kb

குழந்தைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் முழுமையான தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.


அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் பிரிவு 19(1)(a)-இன் கீழ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இணையத்தைப் பயன்படுத்த உரிமை உள்ளது போல, வயது வித்தியாசமின்றி குழந்தைகளுக்கும் அதே உரிமை பொருந்தும் என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. சந்திரன் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பேச்சுரிமையோ சிந்தனை உரிமையோ இல்லை எனக் கூறுவது எந்த அளவுக்குத் தவறோ, அதே அளவுக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதும் தவறானது என நீதிமன்றம் கண்டித்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் காப்பக அமைப்பான ‘ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்’ தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளும் தகவல்களும் (CSEAM) சட்ட விரோதமாகப் பரப்பப்படுவதைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதனைத் தடுக்க இணையப் பயன்பாட்டிற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல; இரண்டையுமே குழந்தைகளுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், முழுமையான தடைக்கு பதிலாகப் பெற்றோரின் கண்காணிப்புக் கட்டுப்பாடுகளைச் (Parental Controls) சமூக ஊடகங்கள் கடுமையாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், சிறுவர்களுக்கான பிரத்யேகக் கட்டுப்பாட்டு முறைகளை (Child Mode) அறிமுகப்படுத்தி அபாயகரமான உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

சமூக ஊடகத் தளங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் மற்றும் இணைப்புகள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளும் இடைத்தரகர்களும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்காததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சட்டவிரோத உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட இணைய முகவரிகள் (URLs) மற்றும் டிஜிட்டல் அடையாளங்களைக் கண்டறிந்து நீக்கும் வகையில் தேசிய அளவிலான தரவுத்தளத்தை (National Database) மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப ரீதியாகப் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) விரைவாக வகுக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

சுற்றுலா தலத்தில் பயங்கர தீவிபத்து!. சொகுசு விடுதி எரிந்ததில் 10 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!. பகீர் வீடியோ!.

Sat Oct 17 , 2026
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற காக்ஸ் பஜார் (Cox’s Bazar) கடற்கரை சுற்றுலாத் தலத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், விடுதியில் இருந்த பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காக்ஸ் பஜாரின் மரினா டிரைவ் பகுதியில் உள்ள இனானி – […]
Bangladesh fire 30kb

You May Like