திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மனம் திறந்தார்.
அண்மைக்காலமாக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு கூட்டணிக் கட்சியின் பொது வேட்பாளராக திருமாவளவன் களமிறக்கப்பட உள்ளதாகவும், இத்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமையவிருக்கும் தவெக அமைச்சரவையில் அவருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின.
இத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் தமக்கு துளியும் இல்லை என்பதை உறுதியாக தெவித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.



