பரபரப்பான அரசியல் சூழலில் இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை..! தனிக்கட்சி அறிவிப்பு எப்போது..?

Annamalai K BJP

கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது..


இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட அண்ணாமலையில் இந்த திடீர் திட்டம், தமிழக அரசியலில் புதிய களத்தை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன..

பாஜக மேலிடத்தில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால், அண்ணாமலை தனக்கென தனி அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்ததாகவும் தெரிகிறது.. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையையும் அண்ணாமலை தொடங்க உள்ளார்.. மேலும் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் தனது புதிய கட்சியின் வேட்பாளர்களையும் நிறுத்த அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.. பூத் அளவில் ஏற்கனவே ரகசிய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

மேலும் அண்ணாமலைக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ரஜினி மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களும் அண்ணாமலைக்கு திரைமறைவில் ஆதரவளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. புதிய கட்சி தொடங்கும் செய்திக்கு அண்ணாமலை இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை..

இந்த பரபரப்பான சூழலில் அண்ணாமலை இன்று டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. தனது நிலைப்பாட்டை எடுத்து சொல்லி, பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது..

புதிய கட்சி தொடங்கும் பணிகளை அண்ணாமலை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. தனது பிறந்தநாளான ஜூன் 4-ம் தேதி புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..! அதிமுக அடையாளங்களை தவிர்த்த விஜய பாஸ்கர்.. திமுகவா..? தவெகவா..?

English Summary

Amidst a charged political atmosphere, reports have emerged that Annamalai is set to travel to Delhi today.

RUPA

Next Post

June 1 Rule Change : முக்கிய அலர்ட் ! இன்று முதல் புதிய விதிகள் அமல்..! என்னென்ன மாற்றம்..?

Mon Jun 1 , 2026
ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் பல முக்கிய விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் நிதி நிலை, வங்கிச் சேவைகள், எரிவாயு சிலிண்டர்கள், டிஜிட்டல் கொடுப்பனவுகள், சூரிய மின் தகடுகள் (solar panels) மற்றும் வாகன விலைகள் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ, எரிவாயு முன்பதிவு செய்யவோ, இணையவழிப் பணம் செலுத்தவோ அல்லது கார் வாங்கவோ திட்டமிட்டிருந்தால், இந்த […]
june mont new rules 1 2

You May Like