தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் பொதுமக்களை வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போது வடசென்னைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், இது படிப்படியாக நகரின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழைப் பொழிவு இன்று முதல் மீண்டும் வேகம் எடுக்கும். பகல் நேரங்களில் இடை இடையே வெயில் அடித்தாலும், திடீரென குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழைப் பதிவுகள் ஆங்காங்கே காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து, அதிகாலை வரை நீடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Read More : மஞ்சள் பால் முதல் இஞ்சி வரை.. பாட்டி காலத்து 10 வீட்டு வைத்தியங்கள்!



