டாஸ்மாக் கிடங்குகள் பராமரிப்பில் மருத்துவத்துறை நிதியா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

Minister Arunraj 2026

டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளுக்காக மருத்துவத்துறையின் நிதி பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 38 மருந்துக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பாதுகாக்கப்படுவதால், கிடங்குகளின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் பொறியியல் பிரிவின் உதவியை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுள்ளது. இதற்காக வெளிப்புற ஒப்பந்த அடிப்படையில் 5 கட்டடவியல் உதவிப் பொறியாளர்கள், 2 மின்சார உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 7 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்தப் பொறியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் டாஸ்மாக் நிர்வாகமே ஏற்கும். மருத்துவத்துறையின் நிதியிலிருந்தோ, மருத்துவப் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்தோ எந்தத் தொகையும் இதற்காக செலவிடப்படாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், கூடுதல் பொறியாளர்களின் வருகையால் மருத்துவப் பணிகள் கழகத்தின் பொறியியல் பிரிவும் வலுப்பெறும். இதன் மூலம் சொந்த மருந்துக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளையும் விரைவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத்துறையின் நிதி டாஸ்மாக் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகப் பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை என்றும், இதுகுறித்து பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsnation_Admin

Next Post

கந்துவட்டி கொடுமையால் வளர்ப்பு நாயை கொன்று தம்பதி தற்கொலை: தெலங்கானாவில் உலுக்கிய சோகம்

Thu Nov 19 , 2026
தெலங்கானாவில் கந்துவட்டி கொடுமை மற்றும் பொதுவெளியில் ஏற்பட்ட அவமானம் காரணமாக, வளர்ப்பு நாயைக் கொன்றுவிட்டு வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
befunky collage 2 2026 11 19T081018.386

You May Like